புனித் ராஜ்குமார் 
சினிமா செய்திகள்

புனித் ராஜ்குமாரின் கடைசி பட டீசர்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

மாலை மலர்

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29-ந்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினர், ரசிகர்கள் என ஒட்டு மொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. முன்னதாக புனித் ராஜ்குமார் ஜேம்ஸ் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் தான் மரணம் அடைந்தார். 

ஜேம்ஸ்

குடியரசு தின விழாவையொட்டி இப்படத்தின் போஸ்டர் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வந்தது. இந்நிலையில் புனித் ராஜ்குமார் இறுதியாக நடித்த ஜேம்ஸ் படத்தின் டீசர் இன்று வெளியானது. புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த படம் என்பதால் ரசிகர்கள் இதனை கண்கலங்கி பகிர்ந்து வருகின்றனர். இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.