லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தி லெஜண்ட்
இதைத்தொடர்ந்து, பிரைடல் ஸ்டுடியோ நூரின் திறப்பு விழா கோவையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரைடல் ஸ்டூடியோவை திறந்து வைத்த லெஜெண்ட் சரவணன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விட்டதாகவும் கூறினார்.
திறப்பு விழாவில் லெஜண்ட் சரவணன்
மேலும் அவர் பேசியதாவது, "மக்களும், மகேசனும் நினைத்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன். கடுமையாக உழைப்பவர்களை எனக்கு எப்போதும் பிடிக்கும். அப்பேற்பட்ட ஒருத்தர் தான் பிரைடல் ஸ்டுடியோ நூரின் நிறுவனர் நூர் முகமது. அவர் மிகவும் அன்பான மனிதர். அவரது அன்பிற்கு கட்டுப்பட்டு தான் இங்கு வந்தேன். நடிகர் நடிகைகளை மிகவும் அழகாக திரையில் காட்டுவதில் ஒப்பனை கலைஞர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நூர் முகமது மிகவும் திறமையான கலைஞர்" என்று பேசினார்.