அருண் விஜய் 
சினிமா செய்திகள்

தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம் - நடிகர் அருண் விஜய்

தமிழில் மிகவும் பிரபலமான நடிகர் விஜயகுமார். இவர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் பரவி வந்தது.

மாலை மலர்

தமிழில் பிரபல நடிகரான விஜயகுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கதாநாயகன், குணசித்திர நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். 'நாட்டாமை' படத்தில் இவரின் கதாபாத்திரம் இன்றளவும் மறக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

விஜயகுமார் - அருண் விஜய்

இந்நிலையில், நடிகர் விஜயகுமாருக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளதாக வதந்திகள் பரவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயகுமாரின் மகன் நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அப்பா வீட்டில் நலமுடன் இருக்கிறார். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம். உங்களின் அன்பு மற்றும் அக்கறைக்கு நன்றி" என்று பதிவிட்டு தனது அப்பா விஜயகுமாருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.