அஜித்  
சினிமா செய்திகள்

பைக் பயணித்தின் இடையே புத்தர் கோவிலில் வழிபாடு செய்த அஜித்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது 'ஏ.கே.61' படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அஜித் - மஞ்சுவாரியர் 

அஜித் - மஞ்சுவாரியர் 

சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் லடாக் சென்று, அங்கிருந்து இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் அவரது பைக் சாகச பயண புகைப்படங்கள் அவ்வப்போது வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அஜித் 

அஜித் 

இந்த பயணத்தில் அஜித்துடன் நடிகை மஞ்சுவாரியரும் இணைந்துள்ளார். பயணத்தில் தன்னையும் சேர்த்துக் கொண்டதற்காக அஜித்துக்கு அவர் நன்றி தெரிவித்து வலைத்தளத்தில் பதிவும் வெளியிட்டிருந்தார். இந்த பயணத்தின் போது அஜித் கார்கில் போர் நினைவிடத்துக்கு சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்தார். அங்கு ராணுவ வீரர்கள் அஜித்துடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

புத்தர் கோவிலில் வழிபாடு செய்த அஜித்

புத்தர் கோவிலில் வழிபாடு செய்த அஜித்

இந்நிலையில் அஜித் தற்போது புத்தர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டுள்ளார். அப்போது புத்த விகாரத்தை அஜித் சுற்றி வந்து வழிபடும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.