சினிமா செய்திகள்

எனக்கு அதில் ஆர்வம் இல்லை.. உண்மையை உடைத்த அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன் அரசியலில் களம் இறங்க உள்ளதாக தகவல் பரவியது.தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சனின் மகனும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அபிஷேக் பச்சன் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி வந்தது.

அமிதாப்பச்சன் ஏற்கனவே அரசியலில் ஈடுபட்டு பிரயாக்ராஜ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி. பதவி வகித்தவர். அபிஷேக் பச்சனின் தாயாரும் நடிகையுமான ஜெயாபச்சனும் சமாஜ்வாடி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார். எனவே அபிஷேக் பச்சனும் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து அமிதாப்பச்சன் போட்டியிட்ட தொகுதியிலேயே போட்டியிட முடிவு செய்து இருப்பதாக பேசப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து அபிஷேக் பச்சன் கூறும்போது, "நான் அரசியலில் ஈடுபட இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எனக்கு அரசியல் ஆர்வம் கொஞ்சமும் இல்லை'' என்றார்.