சினிமா செய்திகள்

ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டும் தமன்னா... வாரத்தில் 3 நாட்கள் விரதம் இருக்கிறாராம்

தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஜோடியாக ‘புருஷன்’ படத்தில் நடித்துள்ளார். இந்தி படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமன்னா ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டி, துர்க்கை அம்மனுக்கு வாரத்தில் 3 நாட்கள் விரதம் இருந்து கோவில்களுக்கு சென்று வருகிறார். மனதில் முக்கிய வேண்டுதலை முன்வைத்து ஆன்மிக தலங்களை சுற்றி வருவதால், ரசிகர்கள் அவரது இந்த மாற்றத்திற்கான காரணத்தை அறிய ஆர்வமாக உள்ளனர்.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா, பால்நிறத்தழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். வளைவு நெளிவான ஆட்டத்தால் ரசிகர்களை வசப்படுத்தியும் வருகிறார்.

பிசி நடிகை

தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஜோடியாக ‘புருஷன்’ படத்தில் நடித்துள்ளார். இந்தி படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆன்மிகத்தில் தமன்னா நாட்டம் கொண்டவர் தான், என்றாலும் சமீபகாலமாக கோவில் கோவிலாக தமன்னா சுற்றி வருகிறார்.

மனதில் ஒரு முக்கிய வேண்டுதலை முன்வைத்து ஆன்மிக தலங்களுக்கு அவர் சென்று வருகிறாராம். துர்க்கை அம்மனுக்கும் வாரத்தில் 3 நாட்கள் விரதமும் இருக்கிறாராம். அவ்வப்போது காலை உணவையும் தவிர்த்து வருகிறாராம். தமன்னாவின் இந்த போக்குக்கு என்ன காரணம்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏதேனும் நல்ல செய்தி சொல்லப் போகிறாரா... பொறுத்திருந்து பார்க்கலாம்.

SCROLL FOR NEXT