சினிமா செய்திகள்

டைகர் முத்துவேல் பாண்டியன்..!- ‘ஜெயிலர் 2’ டிரெய்லர் வெளியானது

நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து, தற்போது உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில், டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

ஜெயிலர் திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் கலந்த மசாலா படமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார்.

மேலும், ஜெயிலரின் முதல் பாகத்தில் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த படம் உலகம் முழுவதிலும் வெளியாகி சுமார் 600 முதல் 650 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்திருந்தது.

ஜெயிலர் 2-ம் பாகம்

இந்த நிலையில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

ஜெயிலர் 2-ஆம் பாகத்தை தயாரித்துள்ள சன்பிக்சர்ஸ் நிறுவனம், அதன் டிரெய்லரை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த டிரெய்லரில் டாக்சி ஒன்றை வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தோன்றுகிறார்.

மேலும் அவர், எதிரிகளுடன் சண்டை காட்சிகளில் மோதுவதும் , பின்னர் கூலாக காரை ஒரு துணியால் துடைப்பதும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது.

ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இவர் இந்த படத்தில் ரஜினியுடன் மோதும் முக்கிய வில்லனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT