தமிழ் சினிமாவின் பன்முகத்திறமை கொண்ட மூத்த கலைஞரான டி.ராஜேந்தர் அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, அகில இந்திய டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக 1000 பேருக்கு விலையில்லா 'அரிசி தானம்' வழங்கும் பிரம்மாண்ட நலத்திட்ட உதவி விழா கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் அமைப்பாளரும், நடிகர் STR தலைமை ரசிகர் மன்றத்தின் தலைவருமான T.வாசு அவர்கள் முன்னிலை வகித்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினார்.
நலிவடைந்த மற்றும் ஏழை எளிய மக்கள் 1000 பேருக்கு தலா ஒரு மூட்டை அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இந்த விழாவின் மூலம் தர்மமாக வழங்கப்பட்டன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரண்டிருந்த டி.ஆர் மற்றும் STR ரசிகர்கள் இந்த விழாவை மக்கள் நலப்பணியாகக் கொண்டாடினர்.
தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு, டி.ராஜேந்தர் அவர்கள் பிரத்யேகமாக ஒரு புதிய பாடலை எழுதி, இசையமைத்து, விழாவில் கூடியிருந்த அனைவரின் முன்பும் பாடி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
மனிதநேயத்தையும் தானத்தின் சிறப்பையும் வலியுறுத்தும் அந்தப் பாடலின் வரிகள்
"ஆண்டவன் கொடுத்த ஆத்மா
அன்பா வாழ்ந்து காட்டுமா
இருந்தா எடுத்துக் கொடுக்குமா
ஏழைத் துயரை துடைக்குமா
வானம் தான் பரந்தது
தானம் தான் சிறந்தது
இரக்க குணத்தில்
இறைவன் இருக்கின்றான்
கருணை வடிவில்
கடவுள் வாழ்கிறான்
அன்பே தெய்வம்
அறங்கள் செய்வோம்
ஆத்மனை நினைப்போம்
ஆதரவு அளிப்போம்'"
டி.ராஜேந்தர் அவர்களின் இந்த உருக்கமான தத்துவப் பாடலும், ரசிகர் மன்றத்தின் இந்த அரிய அறப்பணியும் விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.