சினிமா செய்திகள்

'சுப்ரமணியபுரம்' பட நடிகைக்கு டும் டும் டும்...

திருமணம் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்ட ஒரு தனிப்பட்ட நிகழ்வாக நடைபெற்று உள்ளது.

‘சுப்ரமணிய புரம்’ பட நடிகையான ஸ்வாதி ரெட்டிக்கு நேற்று திருமணம் நடைபெற்று உள்ளது. இதனால் அவருக்க ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2005-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘டேன்ஞர்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்வாதி ரெட்டி. இதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் ‘சுப்ரமணி புரம்’ படம் பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு கனிமொழி, போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘மன்த் ஆஃப் மது’ படத்தில் நடித்து இருந்தார். அதன்பிறகு இவரது நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரை ஸ்வாதி ரெட்டி திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு விவகாரத்து பெற்று பிரிந்தனர். இந்த நிலையில், நடிகை ஸ்வாதி ரெட்டி இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோதியை திருமணம் செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் நாகோதி ஒரு புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் 'பானுமதி & ராமகிருஷ்ணா' மற்றும் 'மந்த் ஆஃப் மது' போன்ற படங்களை இயக்கியதற்காகப் பரவலாக அறியப்படுகிறார். ‘மன்த் ஆஃப் மது’ படத்தில் ஸ்வாதி ரெட்டி நடிக்கும் போது இருவரும் இடையில் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்ட ஒரு தனிப்பட்ட நிகழ்வாக நடைபெற்று உள்ளது. திருமணம் தொடர்பான புகைப்படங்களை நடிகை ஸ்வாதி ரெட்டி சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஸ்வாதி ரெட்டிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.