தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 15-ம் தேதி வெளியான ‘கருப்பு’ திரைப்படம் சூர்யாவின் திரைப் பயணத்தில் மிகச்சிறந்த கமர்ஷியல் கம்பேக் படமாக அமைந்துள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கருப்பு படம் வெளியாக இருந்த நிலையில், சில நிதி சிக்கல்கள் காரணமாக ஒத்திப்போனது. பின்னர் படம் ரிலீஸ் ஆகி மிகப் பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருப்பது சூர்யா ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
கருப்பு படம் முதல் நாளில் சுமார் ₹20.66 கோடி வசூலித்து நல்ல தொடக்கத்தை பெற்று, இரண்டாம் நாளில் ₹38 கோடி வசூலையும், பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக நேற்றுடன் 3 நாட்கள் நிறைவடைந்ததில் இதுவரை சுமார் ₹120.75 கோடியை கடந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றுருக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் ₹78 கோடி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆறு படத்தில் சூர்யா- திரிஷா இணைந்து நடித்திருந்தனர். தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா மற்றும் திரிஷா இப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.
நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அப்பா-மகள் பாசப் போராட்டத்தையும், அதோடு இணைந்த தெய்வீக நம்பிக்கையையும் மையமாகக் கொண்டு இந்த எமோஷனல் ஆக்ஷன் படமாக கருப்பு உருவாகியுள்ளது.