சூர்யா நடிப்பில் உருவாகி வரும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முதல் பாடலான 'பட்டாம்பூச்சி' வெளியாகி 10 நாட்களேயான நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அதிரடி அறிவிப்பை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
மமிதா பைஜுவின் நடனத்தில் வெளியான இப்படத்தின் முதல் 'பட்டாம்பூச்சி' பாடலை சுப்லஹ்ஷினி பாடியுள்ளார். அருண்ராஜா காமராஜ் வரிகள் எழுதியுள்ள இப்பாடலின் கோரஸ் பகுதியை ஆவணி மல்ஹர், ஜெரினா அன்னா, காஞ்சனா ஸ்ரீராம் மற்றும் அருணா மேரி ஜார்ஜ் ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் தற்போது அதன் ‘ஹூக் ஸ்டெப்’ நடனத்திற்காக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்தத் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ஒரு செம்ம டான்ஸ் நம்பரை நடிகர் சூர்யாவே நேரடியாகப் பாடியுள்ளார். சமீபத்தில் 'ரெட்ரோ' படத்தில் 'லவ் டிடாக்ஸ்' பாடலை அவர் பாடியிருந்த நிலையில், தற்போது மீண்டும் மைக் பிடித்துள்ளார். இந்தப் பாடலுக்கான வரிகளை தனுஷின் 'அசுரன்' பட புகழ் மற்றும் 'யூத்' படத்தின் இயக்குநரான கென் கருணாஸ் எழுதியுள்ளார்.
பாடலின் தலைப்பு மற்றும் அது வெளியாகும் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளன. இத்திரைப்படம் வரும் "ஆகஸ்ட் 14 "அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.