சினிமா செய்திகள்

விநாயகர் சதூர்த்தியை ஒட்டி நடிகர் சூர்யாவின் "சீன்" திரைப்படம் புது போஸ்டர் வெளியீடு

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் 47 ஆவது திரைப்படம் சீன்.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடிகர் சூர்யாவின் "சீன்" படக்குழு வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் 47 ஆவது திரைப்படம் சீன். இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தினை இயக்கியு வருகிறார்.

இதனை, சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு கேரளம், சென்னை பகுதிகளில் நடைபெற்று அண்மையில் முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்தது.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து:

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் படம் என்பதால் இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பாத்துக் காத்திருக்கின்றனர்.

மேலும், இப்படம் வரும் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT