Suraj Venjaramoodu 
சினிமா செய்திகள்

கர படத்தில் பரதன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சுராஜ் வெஞ்சரமூடு - போஸ்டர் வெளியீடு | Dhanush

கர படம் வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மாலை மலர்

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் `தேரே இஷ்க் மே'. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. தற்போது, தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். `கர' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், ‘பரதன்’ என்ற கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. நேற்று மமிதா பைஜு, 'செல்லி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டிருந்தது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.