சினிமா செய்திகள்

பெண்கள் மற்றொரு திருமணத்தை நினைப்பது பாவமாக பார்க்கப்படுகிறது: பவன் கல்யாண் முன்னாள் மனைவி ரேணு தேசாய்

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அரசியல்வாதியான பவன் கல்யாண், அம்மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் தனது மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்துள்ள நிலையில், ஒரு ஆண் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம், ஆனால் ஒரு பெண் மற்றொரு உறவை பற்றி நினைப்பது மட்டும் பாவமாக பார்க்கப்படுவதாக நடிகையும் பவன் கல்யாண் முன்னாள் மனைவியுமான ரேணு தேசாய் தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அரசியல்வாதியான பவன் கல்யாண், அம்மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக அறியப்படுகிறார்; இவர் சமீபத்தில் தனது மூன்றாவது மனைவியான அன்னா லெஷ்னேவா என்பவரை விவாகரத்து செய்து சட்டப்பூர்வமாக பிரிவதாக சமீபத்தில் அறிவித்தார்.

நடிகை ரேணு தேசாய்

இதற்கு முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகை ரேணு தேசாய் என்பவரை நடிகர் பவன் கல்யாண் திருமணம் செய்திருந்தார்.

இவர்களுக்கு அகிரா நந்தன், ஆத்யா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு, ரேணு தேசாய் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் மீண்டும் வைரலாகியுள்ளது.

ஆண் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம்

அந்த பேட்டியில் பவன் கல்யாணுடனான உறவு குறித்து நடிகை ரேணு தேசாய், நமது சமூகத்தில் ஒரு ஆண் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம், ஆனால் ஒரு பெண் மற்றொரு உறவை பற்றி நினைப்பது கூட பாவமாக பார்க்கப்படுகிறது என கூறினார்.

இதையடுத்து தொடர்ந்து பேசிய அவர், “அவரை புரிந்துகொள்வதில் நான் தான் மிகவும் நெருக்கமாக இருந்தேன் என்பதை அவரே மறுக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

நான் அவருடைய மனைவி மட்டுமல்ல, உடன் பணிபுரிபவரும் கூட. நீங்கள் ஒருவருடன் 24 மணி நேரமும் இருக்கும்போது, அது ஒரு முழுமையான வாழ்க்கை.

அதுமட்டுமின்றி, நாங்கள் நண்பர்களாகவும் இருந்தோம். நாங்கள் ஒருபோதும் வழக்கமான கணவன் மனைவி போல இருந்ததில்லை.

நாங்கள் எப்போதும் மிக நல்ல நண்பர்களாக இருந்தோம், அதனால் அவர் என்னுடன் அதிகமாக பகிர்ந்துகொள்வார்.

ஒரு பெண் வருத்தத்துடன் வாழ்நாள் முழுவதும் தனியாக வாழ வேண்டுமா? கடந்த ஆண்டு வரை, என் மனம் முற்றிலும் முடங்கிப் போயிருந்தது.

திருமணமும் இல்லை, காதலும் இல்லை. இப்போதும் கூட, எனக்கு காதலின் மீது அவ்வளவாக ஈர்ப்பு இல்லை. வழக்கமான காதல் கதையை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், எனக்கு ஒரு துணை தேவை” என கூறியிருந்தார்.

உடல்நலக் குறைவு ஏற்பட்ட காலக்கட்டத்தில் தனக்கு ஒரு துணை தேவைப்படுவதாகவும், எதிர்காலத்தில் மறுமணம் செய்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் ரேணு தேசாய் கடந்த காலங்களில் சில நேர்காணல்களில் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

ஆனால் இன்றுவரையில் நடிகை ரேணு தேசாய் மறுமணம் செய்துகொள்ளாமல் தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT