Javier Bardem  
சினிமா செய்திகள்

'No to war and Free Palestine' - Oscar மேடையில் முழங்கிய ஸ்பெயின் நடிகர் ஜாவியர் பார்டம்

Nithish Kumar

ஆஸ்கார் விருது விழாவை தொகுத்து வழங்கிய ஸ்பெயின் நடிகர் ஜாவியர் பார்டம், ""NO TO WAR AND FREE PALESTINE" என்று கூறினார்.

திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன. 98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆஸ்கார் விருது விழாவை தொகுத்து வழங்கிய ஸ்பெயின் நடிகர் ஜாவியர் பார்டம், ""NO TO WAR AND FREE PALESTINE" என்று கூறினார். இவரது இந்த பேச்சுக்கு அரங்கம் அதிர கைத்தட்டல் கிடைத்தது. அப்போது அவுருடன் நின்றிருந்த நடிகை ப்ரியங்கா சோப்ரா புன்முறுவல் செய்து அவரது பேச்சை வரவேற்றார்.

அக்டோபர் 7, 2024 இல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன கிளர்ச்சி அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து இஸ்ரேல் பாலஸ்தீன நகரங்களான காசா, ராபா உள்ளிட்ட நகரங்கள் மீது கடந்த 3 வருடங்களாக தாக்குதல் நடத்தி வந்தது. இதில் 70,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2025 அக்டோபரில் அமெரிக்கா மத்தியஸ்தத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் போர் நிறுத்தத்தை மீறி அவ்வப்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.