ஐஸ்வர்யா ராய்- சவுந்தர்யா ரஜினிகாந்த் 
சினிமா செய்திகள்

நான் ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகை- சவுந்தர்யா ரஜினிகாந்த்

முந்தைய தலைமுறையும் இன்றைய தலைமுறையையும் இணைக்கும் வகையில் கதையை எழுதி முடித்து படம் பண்ணி ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்க்க போகிறோம்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்த 'லவ்' வெப் தொடர் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. காதல் மீது அதிக நம்பிக்கை கொண்ட சௌந்தர்யா, ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்பாவின் சுயசரிதை புத்தகத்தை வெப் தொடராக மாற்றும் திட்டம் குறித்து அவர் பேசியுள்ளார்.

‘வித் லவ்’ படத்திற்கு அடுத்ததாக சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி உள்ள வெப் தொடர் ‘லவ்’. தொடரை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். நெட்பிளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாகிறது. படம் குறித்து சவுந்தர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நல்ல கெமிஸ்ட்ரி

14 வருடத்திற்கு முன்பு கோவா என்ற படத்தை தயாரித்தேன். அடுத்ததாக ‘வித் லவ்’ படத்தை தயாரித்தேன். இப்போது ‘லவ்’ என்ற வெப் தொடரை தயாரித்துள்ளேன். நெட்பிளிக்ஸ்சிற்கு படம் பண்ணுவது புதுவிதமான அனுபவம். காதல் மீது அதிக நம்பிக்கை கொண்டவள். காதல் படங்களை ரசித்து பார்ப்பேன். காதல் என்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால்தான் வித் லவ், ஹேஸ்டேக் லவ் என்று படம் பண்ணுகிறேன்.

முந்தைய தலைமுறையும் இன்றைய தலைமுறையையும் இணைக்கும் வகையில் கதையை எழுதி முடித்து படம் பண்ணி ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்க்க போகிறோம். ஹேஸ்டேக் லவ் என்று பெயர் வைப்பதற்கு காரணம் ஜென்சி தலைமுறைக்கும் பொருந்தும். படத்தின் கேரக்டருக்காக அர்ஜூன்தாசையும், ஐஸ்வர்யா லட்சுமியையும் தேர்ந்தெடுக்கும் போது இந்த கதைக்கு நல்ல கெமிஸ்ட்ரி தேவைப்பட்டது.

ஐஸ்வர்யா ராய்

அந்த கெமிஸ்ட்ரி இருவரிடமும் உள்ளது. இந்த படம் 2, 3 காதலை பேசுகிறது. அப்பா தொடரின் டிரெய்லரை மட்டும் பார்த்து விட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னார். இன்னும் படம் பார்க்கவில்லை. அப்பாவிற்கு அடுத்ததாக நான் பார்த்து ரசித்தது ஐஸ்வர்யா ராய்தான். நான் உங்களுடைய தீவிர ரசிகை என்று அவரிடமே சொல்லி விட்டேன். கதை எழுதுவதும் இயக்குவதும் ரொம்ப பிடிக்கும்.

அப்பாவின் சுயசரிதை புத்தகத்தை பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதமாக பார்க்கிறேன். முதலில் அவர் அதை எழுதியது புத்தகமாக வரட்டும். அதற்கடுத்ததாக அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக எடுக்கலாம். ஜெயிலர் படத்தைவிட ஜெயிலர் 2 படத்திற்கு அப்பா அதிக உழைப்பை கொடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராகவேந்திரா கல்யாண மண்டபம்

ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் பரிமாணம் முடிவுக்கு வருகிறது. விரைவில் வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட உள்ளது. அதன் அடுத்த பரிமாணம் குறித்து தகுந்த நேரத்தில் முறையாக வெளியிடுவோம் என்றார்.

SCROLL FOR NEXT