சினிமா செய்திகள்

சூரியின் மண்டாடி படத்திற்கு U/A 16+ சான்றிதழ்!

படம் திரையரங்குகளில் செப்.10ம் தேதி வெளியாக உள்ளது.

சூரி நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யு/ஏ16+ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் கால அளவு 154 நிமிடங்கள் மற்றும் 51 வினாடிகள் ஆகும்.

செப்டம்பர் 10ம் தேதி படம் வெளியாக உள்ளநிலையில், இன்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக படம் செப்.4ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பின் ஒத்திவைக்கப்பட்டது.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், மிதுன் ஜெய் சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் பதாகையின் கீழ் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கடைசியாக சூரி நடிப்பில் வெளியானப் படம் மாமன். அதனைத்தொடர்ந்து மண்டாடி வெளிவருகிறது. அதன்பின் ராமின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை வெளியாக உள்ளது.