சினிமா செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மகன்களுக்கு மொட்டை போட்ட சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலானது. சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில், பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரியில் வெளியான படம் பராசக்தி. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருந்தார். பேசில் ஜோசப், ராணா டக்குபதி, சேத்தன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மொழி திணிப்பை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரூ.100 கோடிக்கும் மேல் வசூலானது. இந்நிலையில் பராசக்தி படம் வரும் பிப்.7ஆம் தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவகார்திகேயன் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரது 2 மகன்களுக்கும் மொட்டை போட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவரது மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT