70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப். 21) கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.
அவ்வ்கையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி படத்திற்கு 2 ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.
கொட்டுக்காளி படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதை பி.எஸ். வினோத்ராஜ் வென்றார். அதே போல சிறந்த நடிகைக்கான விருதை அன்னா பென் வென்றார்.
இந்நிலையில், கொட்டுக்காளி படத்திற்காக விருது வென்ற பி.எஸ். வினோத்ராஜ் மற்றும் அன்னா பென் ஆகியோரை சிவகார்த்திகேயன் வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படங்களை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வெளியிட்டுள்ளது.
Our #Kottukkaali has been honoured at the #70thFilmFareAwardsSouth. @PsVinothraj wins the Best Director Award - Tamil (2024) and our @AnnaBenOfficial wins the Best Actress Award - Tamil (2024) ?Moments like these remind us why we believed in this story.Proud of our team.… pic.twitter.com/hevzuQJ5K2