அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மூன்றாவது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மகிழ்ச்சிகர செய்தியை முன்னிட்டு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாரை பின்னணி பாடகர் வேல்முருகன் நேரில் சந்தித்து புத்தம் புது நாணயங்களினால் உருவாக்கப்பட்ட காசு மாலையை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார்.
ஐயப்ப பிரசாதம்:
அத்துடன் சபரிமலை ஐயப்பன் கோவிலின் பிரசாதத்தையும் வழங்கினார். அப்போது பிரபல இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன் உடன் இருந்தார்.
முன்னதாக தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு முதலமைச்சர் விஜய், முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
ஜி.வி. வீடியோ:
அதில், தனக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசிகர்களுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் நன்றி தெரிவித்தார்.
தற்போது பாடகர் வேல்முருகன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரை நேரில் சந்தித்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.