பாடகி ஜமுனா ராணி 
சினிமா செய்திகள்

‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை பாடிய பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி மரணம்

1938-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஜமுனா ராணி, தனது 7-வது வயதில் “தியாகய்யா” என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக அறிமுகமானார்.

கடந்த 1998-ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. மேலும் அண்ணாத்துரை விருதையும் அவர் பெற்று உள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி பெங்களூரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 6 ஆயிரம் பாடல்களுக்கு மேல் ஜமுனா ராணி பாடி இருக்கிறார். 1938-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஜமுனா ராணி, தனது 7-வது வயதில் “தியாகய்யா” என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக அறிமுகமானார்.

கலைமாமணி விருது

அவர் குழந்தைத்தனமான குரலுக்கு சொந்தக்காரர். 1952-ம் ஆண்டு வெளிவந்த “கல்யாணி” என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தில் இளையராஜா இசையில் இடம் பெற்ற “நான் சிரித்தால் தீபாவளி” என்ற பாடலையும் ஜமுனா ராணி பாடினார்.

“காளை வயசு கட்டான சைசு, செந்தமிழ் தோன் மொழியாள், பாட்டொன்று கேட்டேன், காட்டில் மரம், சின்னச் சின்ன சிட்டு, காவேரி தாயே, உங்க மனசு ஒரு தினுசு, தாரா தாரா வந்தாரா, எந்த நாளும் சந்தோஷமே, யாரடி நீ மோகினி, குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே, மாமா மாமா மாமா, ஆசையும் என் நேசமும்” என புகழ்பெற்ற பல பாடல்களை பாடியவர். 1940 முதல் 1960 வரை தென்னிந்திய இசை உலகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்தார்.

கடந்த 1998-ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. மேலும் அண்ணாத்துரை விருதையும் அவர் பெற்று உள்ளார்.

வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் ஜமுனா ராணியின் உயிர் பிரிந்தது. ஜமுனாராணியின் இறுதி சடங்குகள் இன்று மதியம் கல்லஹள்ளி என்ற இடத்தில் நடைபெறுகிறது.