சினிமா செய்திகள்

சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி: தேதி குறித்த படக்குழு

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

நடிகர் சிலம்பரசன், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் தனது 49-வது படத்தில் நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்த ப்ரோமோவை அக்டோபர் 4-ந் தேதி வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். முதல் முறையாக சிம்பு- வெற்றிமாறன் இணைவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.

இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என வெற்றி மாறன் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.