தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், லைகா-ஜேஎஸ்கே மீடியா தயாரிப்பில் உருவான அதிரடி ஆக்ஷன், ஹைஸ்ட் திரைப்படம் ‘சிக்மா’க்கு மத்திய திரைப்படத் தணிக்கைக்குழு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், லைகா மற்றும் ஜேஎஸ்கே மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள பிரம்மாண்டமான திரைப்படம் ‘சிக்மா’.
ஒரு அதிரடி ஆக்ஷன் மற்றும் ஹைஸ்ட் கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
முன்னதாக இப்படத்தின் பாடல்களும், போஸ்டர்களும் மற்றும் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கைக்குழு 'U/A' சான்றிதழ் வழங்கியுள்ளது.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.