சினிமா செய்திகள்

துருவ் விக்ரமின் 'ஜாக்கி' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இப்படத்தில் சாய் தீனா, பிருத்வி ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

துருவ் விக்ரம் நடிக்கும் 'ஜாக்கி' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படமான 'ஜாக்கி' குறித்த முக்கிய அறிவிப்பை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. ‘கருப்பு’ படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றிய கரண் அரவிந்த் குமாருடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள துருவ் விக்ரம், "அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 'ஜாக்கி' படப்பிடிப்பு நாளை (இன்று) முதல் தொடங்குகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

இசை

இப்படம் தொடர்பான வீடியோ முதல் வீடியோவில் துருவ் விக்ரம் ஒரு சண்டைப் பயிற்சி கலைஞராக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இப்படத்தில் சாய் தீனா, பிருத்வி ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

‘பைசன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் இப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

SCROLL FOR NEXT