சினிமா செய்திகள்

ஜமா புகழ் பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார்.

மாலை மலர்

ஜமா புகழ் பாரி இளவழகன் - NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார். இந்த படத்தை வரும் கோடையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'குட் நைட்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஆகிய வெற்றி படங்களை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.