‘சேயோன்’ படத்தின் சிறப்பு போஸ்டர் 
சினிமா செய்திகள்

‘மண்ணின் வீரம்.. மயிலோனின் தீரம்!’: சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ‘சேயோன்’ படக்குழு

சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மண்ணின் வீரம்.. மயிலோனின் தீரம்!’ என்ற கம்பீரமான தலைப்புடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் தற்போது புத்துணர்ச்சியுடனும், உத்வேகத்துடனும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். கதை அடுத்த அத்தியாயத்திற்கு முன்னேறுவதோடு, பல முக்கியக் காட்சிகள் இடம்பெறுவதால் படக்குழுவினர் அதன் தனித்துவமான உலகத்தை உயிர்ப்பிக்கவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பாக கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

சிறப்பு போஸ்டர்

நாட்டின் 80-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதனை முன்னிட்டு ‘சேயோன்’ படக்குழுவினர் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ‘மண்ணின் வீரம்.. மயிலோனின் தீரம்!’ என்ற கம்பீரமான தலைப்புடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.