சினிமா செய்திகள்

கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘செங்குலம்’ - அறிவிப்பு வீடியோ வெளியீடு!

2027-ல் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணன் ரவி குழுமம் சார்பில், தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், காஷ்மீரிலும் நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என ஐந்து மொழிகளில், 2027-ம் ஆண்டு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT