இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் `மனிதன் தெய்வமாகலாம்' என்ற படத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார். விஜயா சதீஷ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. `மனிதன் தெய்வமாகலாம்' திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது. முன்னதாக இந்தப் படத்தின் "தங்க ரத்தினமே" பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலின் வரிகளை மு வி எழுதி இருந்தார். இந்தப் படத்திற்கு ஏ.கே. ப்ரியன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், மனிதன் தெய்வமாகலாம் படத்தின் அடுத்த பாடல், `கலங்காதே ராசாவே' மியூசிக் வீடியோ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் போஸ்டரில் இந்தப் பாடலின் மியூசிக் வீடியோ நாளை (மார்ச் 30) மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதன் தெய்வமாகலாம் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ரவி வர்மா மேற்கொள்ள, தீபக் எஸ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இந்தப் படத்திற்கு பாக்கியராஜ் வெள்ளையன் கலை இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளார்.