நடிகர் நாகார்ஜூனா 66 வயதிலும் இளம் கதாநாயகர்களுடன் போட்டி போட்டு நடித்து வருகிறார். அவரது ஸ்டைலிஸ் தோற்றம் ரசிகர்களை வியக்க வைக்கிறது. அவரது வாழ்க்கை முறை, உடல் கட்டுப்பாடு, உணவு பழக்க வழக்கங்கள் பலருக்கு முன் மாதிரியாக இருந்து வருகிறது. அவரது உடல் நல ரகசியம் குறித்து அவரது தனிப்பட்ட மேக்கப்மேன் கூறியதாவது:-
நாகார்ஜூனா வாரத்தில் 5 நாட்கள் மிதமான உணவை சாப்பிடுகிறார். காலை உணவாக ஒரே ஒரு இட்லி, வடை மட்டுமே சாப்பிடுகிறார். பெரும்பாலும் பசிக்கும் போது மட்டுமே சாப்பிடுவார். மதிய உணவில் கட்டாயம் வெண்டைக்காய் மற்றும் சூடான சிப்ஸ் இருக்க வேண்டும். சனிக்கிழமை இரவு நாகார்ஜூனாவுக்கு பாம்ப் லெட் மீன் மிகவும் பிடிக்கும். ஒன்று அல்லது 2 மீன்கள் சாப்பிடுவார். அந்த மீன் பூண்டு, இஞ்சி, மிளகு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை 2 அல்லது 3 மட்டன் துண்டுகள் அல்லது சிக்கன் சாப்பிடுவார். தினமும் உடற்பயிற்சி நிலையத்தில் தவறாமல் பயிற்சி செய்வார்.
காலையில் படப்பிடிப்பிற்கு வரும் போது எலுமிச்சை, நெல்லிக்காய், கேரட், பீட்ரூட், வெல்லம், தேன் கலந்த சிறப்பு ஜூஸ் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் நாகார்ஜூனா. இதுதான் அவருக்கு இன்னும் முடி கொட்டாத ரகசியம். பெரும்பாலும் படப்பிடிப்புக்காக அவர் ‘விக்’ பயன்படுத்துவதில்லை என்றார்.