சந்தோஷ் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் ‘இற இறகாக’ வெளியாகி உள்ளது.
பிர்லா ஸ்டூடியோஸ், நீலம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
மணிகண்டனுடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி, ரகு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் மணிகண்டன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் டிச.4ம் தேதி வெளியாக உள்ளது.