சினிமா செய்திகள்

57-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘Scroll’ திரைப்படம்

இரு கேள்விகளுக்கும் இடையே, விறுவிறுப்பான ஒரு திரைக்கதையாக விரிகிறது இந்தப் படம்.

K16 Studios தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Scroll’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘இந்தியன் பனோரமா’ பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு ICFT-UNESCO Gandhi Medal விருதிற்கும் இந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பிற நாட்டு திரைப்படங்களோடு தேர்வான ஒரே தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

‘Password’ என்ற தமிழ் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கண்ணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். ‘Screen movie’ வகையை சார்ந்த இந்த திரைப்படம், கதை முழுக்க நாயகனின் செல்போன் திரை வழியே சொல்லபடுகின்ற வித்தியாசமான முயற்சியாக உருவாகி இருக்கிறது. Smartphone addiction என்பதை மையப்படுத்தி இதன் திரைக்கதை அமைந்துள்ளது.

அந்த செவ்வக சாதனத்திற்கு ஒருவர் அடிமையாவதன் காரணிகளை அதன் அடிநாதத்தில் இருந்து விளக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் பிடியில் சிக்கியிருக்கிறதா மனித இனம்? அல்லது மனிதனின் கோர மனதின் கருவியாக தொழில்நுட்பம் மாறியிருக்கிறதா? இந்த இரு கேள்விகளுக்கும் இடையே, விறுவிறுப்பான ஒரு திரைக்கதையாக விரிகிறது இந்தப் படம்!

படக்குழு மற்றும் வெளியீடு:

அரவிந்த் சுந்தர் மற்றும் காவ்யா அனில் முதன்மை காதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ‘ஹாமம்’ மேகா ராஜன் , ‘கொட்டுக்காளி’ முருகன் கோவிந்தசாமி , ‘விக்கல்ஸ்’ சிபி , பொற்கொடி, சுரேந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜோகன் மற்றும் தினகர் (JD) ஆகியோர் இசை அமைத்துள்ளனர். திரைக்கதை, ஒளிப்பதிவு , VFX பணிகளை படத்தின் இயக்குநர் கண்ணன் மேற்கொண்டுள்ளார்.

மிக குறைந்த நபர்களை கொண்டு குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் அதன் கதைக்களமும், திரைக்கதையும் பெரும் படங்களுக்கு மத்தியில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் அதற்கான அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது.

20 நவம்பர் முதல் 28 நவம்பர் வரை நடைபெறும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் World Premiere ஆக முதன் முதலில் திரையிடப்படுகிறது. இந்தப் படம் அடுத்த வருடம் திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT