சினிமா செய்திகள்

'சீன்' படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு நஸ்ரியா நன்றி: BTS புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சி

ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் நஸ்ரியா மீண்டும் தமிழ்த் திரையுலகில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நஸ்ரியா நஜீம் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'சீன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தின் வெற்றிக்கும், தாங்கள் அளித்து வரும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நஸ்ரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த முன்னணி நடிகர் சூர்யா மற்றும் இளம் நடிகர் நஸ்லன் ஆகியோருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த சில சிறப்பு ஸ்டில்களையும் அவர் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.

ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் நஸ்ரியா மீண்டும் தமிழ்த் திரையுலகில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியான இன்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு உதவியாக மாயா என்ற கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடித்துள்ளார். தங்களது காம்பினேஷன் காட்சிகளிலும், நடிப்பிலும் இவர்கள் இருவரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர்.

வில்லனாக மிரட்டிய நஸ்லன்

இப்படத்தின் மூலம் பிரபல இளம் நடிகர் நஸ்லன் தமிழ்த் திரையுலகில் காலடி பதித்துள்ளார். இதில் ஈஸ்வரன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அவர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். திரையில் எதிரியாகக் தோன்றினாலும், நிஜத்தில் தங்களுக்குள் இருக்கும் நல்ல நட்பையும் புரிதலையும் நஸ்ரியா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த நவம்பர் 6-ஆம் தேதி வெளியான இப்படம், தென்னிந்தியா முழுவதும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்', 'கருப்பு' ஆகிய படங்களைத் தொடர்ந்து சூர்யாவின் இந்த ஆண்டின் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாக இப்படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT