பிரபல இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாபு விஜய்.
இவர் தற்போது ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் நடிகர் ஜெய் நாயகனாகவும், நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தை இயக்கும் பாபு விஜய் தான் இப்படத்தின் தயாரிப்பாளர்.
‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் முதல் மற்றும் செகண்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடுகிறார்.