சினிமா செய்திகள்

‘சர்தார் 2’ ஓ.டி.டி. வெளியீடு தேதி அறிவிப்பு - எங்கு, எப்போது பார்க்கலாம்?

செப்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் சர்தார். தண்ணீர் விலைபொருளான கதையை மையமாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் ‘சர்தார் 2’ உருவானது. இதனையும் பி.எஸ். மித்ரனே இயக்கினார். இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

செப்.10ம் தேதி சூரியின் மண்டாடிக்கு போட்டியாக வெளியான இப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT