சினிமா செய்திகள்

சந்தானத்தின் ‘அதிசய பிறவி’ - புதுப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சுதாமன் கிருஷ்ணா எழுத்து மற்றும் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள புதிய படத்திற்கு அதிசய பிறவி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் மற்றும் கே7 ஸ்டூடியோஸ் சார்பில் கே.ஜே.கணேஷ், விஜய் கே செல்லையா ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

படத்தில் கோபிகா ரமேஷ், ஜென்சன் திவாகர், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், பாடல்கள் உள்ளிட்ட பிற அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT