சினிமா செய்திகள்

Sanju Samson | திரைப்பட வாய்ப்பை மறுக்க இதுதான் காரணம் - சஞ்சு சாம்சன் ஓபன் டாக்

எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்பதை இயக்குநர்கள் முடிவு செய்வர்.

இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரிவா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அதிரடி." பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். மலையாளம், தமிழ், கன்னடா, தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.

இந்த நிலையில் அதிரடி படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சஞ்சு சாம்சன், "அனைவருக்கும் வணக்கம், திரைப்பட நிகழ்வில் கலந்து கொள்வது புதிய அனுபவமாக இருக்கிறது. நண்பர் அழைக்கும் போது வந்தே ஆக வேண்டும். மிக்க மகிழ்ச்சி மற்றும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க சிறிய கதாபாத்திரமாக இருந்ததால் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். நடித்தால் கொஞ்சம் பெரிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும்.

எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்பதை இயக்குநர்கள் முடிவு செய்வர். பசில் பார்க்க எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார், ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அவர் மிகவும் சீரியசாக இருப்பார். நண்பர்கள் டின்னருக்கு அழைத்தால் கூட முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே என்பார். கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கான அட்டவணையுடன் செயல்படக்கூடியவர்," என்று தெரிவித்தார்.