நடிகை சமந்தா தயாரித்து, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'மா இன்டி பங்காரம்' என்ற தெலுங்கு படம். தமிழில் டப் செய்து 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.
இந்த திரைப்படம் நேற்று வெளியான நிலையில், முதல் நாளிலேயே உலகவில் ரூ.10.70 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு சமந்தா ஆக்ஷன் கதைக்களத்தில் இறங்கியுள்ளதால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேற்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளன.
முதல் நாள் வசூல்..
இந்த நிலையில் ' எங்கள் தங்கம்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் உலகளவில் முதல் நாளிலேயே சுமார் ரூ.10.70 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் இந்தியாவில் மட்டும் ரூ.6.20 கோடியும், வெளிநாடுகளில் ரூ.4.50 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்றுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.