சினிமா செய்திகள்

ஆண் குழந்தைக்கு பெற்றோரானர் சமந்தா - ராஜ் நிடிமொரு தம்பதி!

குழந்தைக்கு தேவ் என பெயர் சூட்டியுள்ளனர்.

நடிகை சமந்தா மற்றும் தயாரிப்பாளர் ராஜ் நிடிமொரு தம்பதியினருக்கு நேற்று (நவ.19) ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தங்கள் மகனுக்கு தேவ் நிடிமொரு என பெயரிட்டுள்ளதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

குழந்தையின் பிஞ்சு விரல்களைத் தாங்கி பிடித்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், இதுவரை இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியை பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கோவை ஈஷா யோகா மையத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்குப் பிறந்துள்ள முதல் குழந்தை இதுவாகும்.

இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தொடர்ந்து, திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் சமந்தா - ராஜ் தம்பதிக்குத் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT