தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வரும் சாய் பல்லவி நடிப்பில் கடைசியாக வெளியான 'அமரன்' மற்றும் 'தண்டேல்' படங்கள் தொடர் வெற்றி பெற்று வசூல் குவித்தது.
தற்போது இந்தியில் 'ராமாயணம்' படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தனுசின் புதிய படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சாய் பல்லவியிடம் 'உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேட்கப்பட்டது.
இதற்கு, 'இப்போதைக்கு திருமணம் இல்லை. கண்டிப்பாக இல்லை. நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன்" என்று சிரித்தபடி கூறிச்சென்றார் சாய் பல்லவி.