சினிமா செய்திகள்

'Spider-Man: Brand New Day'படக்குழுவை வாழ்த்திய ருசோ சகோதரர்கள்!

ஸ்பைடர்-மேன் இன்ஃபினிட்டி ஸ்டோன்களை ஏந்தியிருக்கும் சிறப்பு கலைப்படத்தையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

மார்வெல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள, டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட் நடித்துள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் , அமெரிக்கா மற்றும் கனடாவில் தனது முதல் வார இறுதியில் $360 மில்லியனுக்கும் அதிகமான வசூல் செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம், இதுவரை ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் வைத்திருந்த $357.1 மில்லியன் வசூல் சாதனையை இது முறியடித்துள்ளது.

ரூஸோ சகோதரர்களின் பதிவு:

இந்த சாதனையைத் தொடர்ந்து, 'Avengers: Endgame' படத்தின் இயக்குநர்களான ருசோ சகோதரர்கள் (ஆந்தனி ருசோ, ஜோ ருசோ) சமூக வலைதளத்தில் சிறப்பு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட பதிவில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன், நடிகர்கள் டாம் ஹாலண்ட், சென்டயா உள்ளிட்ட முழு படக்குழுவிற்கும் பாராட்டு தெரிவித்து, "The gauntlet has been passed" (சாதனையின் கிரீடம் அடுத்த தலைமுறைக்கு சென்றுவிட்டது) என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஸ்பைடர்-மேன் இன்ஃபினிட்டி ஸ்டோன்களை ஏந்தியிருக்கும் சிறப்பு கலைப்படத்தையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவு, மார்வெல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, எதிர்கால Avengers படங்களில் ஸ்பைடர்-மேனின் பங்கு குறித்த புதிய ஊகங்களையும் கிளப்பியுள்ளது.