சினிமா செய்திகள்

இணையத்தில் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ: கொந்தளித்த மதராசி நடிகை

இணையத்தில் வைரலான என்னுடைய புனையப்பட்ட புகைப்படத்தை பகிர வேண்டாம் என ருக்மணி வசந்த் கோரிக்கை.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மதராசி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை நடிகை ருக்மணி வசந்த் கொள்ளை கொண்டார். இந்த நிலையில் தற்போது அவர் நீல நிற பிகினியில் இருப்பது போன்ற, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பதிவிட்ட அவர், “என்னைப் போன்று ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரப்பபடுவதை நானும் என் குழுவினரும் கண்டறிந்துள்ளோம்.

இந்த படங்கள் முற்றிலும் போலியானவை மற்றும் புனையப்பட்டவை என்பதை நான் தெளிவாக கூற விரும்புகிறேன்.

இதுபோன்ற சித்திரிக்கப்பட்ட படங்களை உருவாக்குவதும் பரப்புவதும் பொறுப்பற்ற செயலாகும். மேலும் இது கடுமையான தனியுரிமை மீறலாகும்.

நாங்கள் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, இந்த படங்களை உருவாக்கி பரப்பியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை எடுப்போம்.

இதுபோன்ற பதிவை பகிர்வதில் இருந்து விலகி இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT