சினிமா செய்திகள்

ரூ.540 கோடி வசூல்..கனடாவில் திடீரென நிறுத்தப்பட்ட ஜெயிலர் 2: என்ன நடந்தது?

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள இந்தப் படம், வெளியானது முதல் வசூலில் சாதனைகளைப் படைத்து வருகிறது.

ரஜினிகாந்துடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள இந்தப் படம், வெளியானது முதல் வசூலில் சாதனைகளைப் படைத்து வருகிறது. உலக அளவில் வெறும் ஆறு நாட்களில் இப்படம் சுமார் 540 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் வேளையில், கனடாவில் இப்படத்தின் திரையிடல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கனடாவில் இப்படத்தை விநியோகம் செய்யும் 'யோர்க் சினிமாஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 21 முதல் தங்கள் திரையரங்குகளில் ஜெயிலர் 2 திரைப்படத்தின் காட்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. திரையரங்கின் கட்டுப்பாட்டை மீறிய சில தவிர்க்க முடியாத சூழல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

திரையரங்க தரப்பில் அனைத்து நிதி மற்றும் ஒப்பந்தப் பணிகளும் முறையாகச் செலுத்தப்பட்டுவிட்ட போதிலும், வட அமெரிக்க விநியோகஸ்தர்களான 'ஸ்லோகா என்டர்டெயின்மெண்ட்ஸ்' மற்றும் 'பிரத்யங்கிரா சினிமாஸ்' நிறுவனங்கள் தரப்பிலிருந்து படத்தைத் தொடர்ந்து திரையிடத் தேவையான 'கேடிஎம்' எனப்படும் டிஜிட்டல் அனுமதி குறியீடுகள் வழங்கப்படவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து உரிய ஒப்புதல் கிடைக்காததே இந்தத் தொழில்நுட்பத் தடைக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

ரஜினிகாந்துடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் வசூலித்து வரும் சூழலில், கனடாவில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் எப்போது சரியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனால் கனடாவில் படம் பார்க்கத் திட்டமிட்டிருந்த ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT