சினிமா செய்திகள்

சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்த RJ Balaji

ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

மாலை மலர்

ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

படத்தின் டீசர் நேற்று வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு இன்று ரசிகர்களுடன் திரையரங்கிள் பார்த்து மகிழ்ந்தனர். அப்போது ஆர் ஜே பாலாஜி ரசிகர்களிடம் படத்தை தீபாவளிக்கு வெளியிட முயற்சி செய்கிறோம் என கூறினார்.