சினிமா செய்திகள்

‘சியான் 63’ படத்தில் இணைந்த ரியா சிபு!

விக்ரமின் புதிய படத்தில் இணைகிறார் சர்வம் மாயா படப்புகழ் ரியா சிபு.

‘இருமுகன்’ இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு, தற்காலிகமாக ‘சியான் 63’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் அறிவிப்பு மற்றும் க்ளிம்ஸ் வீடியோ விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்.17ஆம் தேதி வெளியானது. அந்த அறிவிப்பு வீடியோவின் படி இத்திரைப்படம் ஒரு கேங்க்ஸ்டர் பின்னணியைக் கொண்ட அதிரடித் திரைப்படமாக உருவாகிறது.

விக்ரம் சமையல்காரர் மற்றும் கேங்க்ஸ்டர் என இரட்டைப் பரிமாணங்கள் கொண்ட பாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் சர்வம் மாயா படப்புகழ் ரியா சிபு நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT