சினிமா செய்திகள்

ராத்து ராசன் இவன்..|சம்பளத்தை கணிசமாக உயர்த்திய இசையமைப்பாளர் சாய் அபயங்கர்

இசை அமைப்பாளராக ‘ராக்கா’ படத்தில் அல்லு அர்ஜுன்-அட்லியுடன் இணையும் சாய் அபயங்கர்.

தமிழில் பல்வேறு இசை ஜாம்பவான்களை கோலிவுட் அறிமுகம் செய்துள்ள நிலையில், தற்போது வளர்ந்து வரும் இளம் இசை நட்சத்திரமான சாய் அபயங்கரை தமிழ் சினிமா அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு அபயங்கரின் இசையில் உருவான ‘கட்சி சேர’ ஆல்பத்தை திங் மியூசிக் நிறுவனம் வெளியிட்டது. இந்த பாடல் உலகளவில் அதிகம் தேடப்பட்ட பாடல்களில் ஒன்றாக வலம் வந்தது.

இதையடுத்து ‘ஆச கூட, சித்திர புத்திரி, விழி வீக்குற’ போன்ற பிரபலமான பாடல்கள் மூலம் திங் இண்டி கலெக்டிவ் இசை நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய ஒருவராக அபயங்கர் தன்னை நிலை நிறுத்தினார்.

தற்போது அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி இணைந்து பணிபுரியும் ‘ராக்கா’ படத்தில் பின்னணி இசைக்காக சாய் அபயங்கர் சுமார் 3 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு முன்னணி இசையமைப்பாளர்களான எஸ்.எஸ்.தமன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் போன்றோருக்கு இணையாக சாய் அபயங்கரும் சுமார் ரூ.4 கோடி வரை விரைவில் பெறக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT