சினிமா செய்திகள்

மகுடம் படத்தின் ‘ரைஸ் ஆஃப் லிங்கா’ பாடல் வெளியீடு!

படம் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி உள்ளப் புதியப் படம் மகுடம். இது விஷாலின் 35-ஆவது திரைப்படமாகவும், பிரபல தயாரிப்பு நிறுவனமான 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின் 99-ஆவது திரைப்படமாகவும் உருவாகி உள்ளது.

இத்திரைப்படத்தை முதலில் 'ஈட்டி' பட இயக்குநர் ரவி அரசு இயக்குவதாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால், பின்னர் அவர் படத்திலிருந்து விலகியதால், நடிகர் விஷாலே இப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

படம் ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ளது. விஷாலுடன் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜெயபிரகாஷ், ஜான் விஜய் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ரைஸ் ஆஃப் லிங்கா வெளியாகி உள்ளது.