நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் 'ராம் இன் லீலா' திரைப்படத்திலிருந்து முதல் சிங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் பெரிதும் எதிர்பார்த்த இரண்டாவது சிங்கிள் 'செப்பு சேல' பாடல் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாக இருக்கிறது.
திரைப்படக் குழுவினரின் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, இந்த 'செப்பு சேல' பாடல் பிரம்மாண்டமான திருமண பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல நாட்டுப்புற மற்றும் சினிமா பாடகரான வி.எம். மகாலிங்கத்தின் குரலில், அங்கித் மேனனின் இசையில் துள்ளலான தாளங்களுடன் இந்த பாடல் அமைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த பாடலுக்குப் பிரபல பெண் பாடலாசிரியர் உமா தேவி வரிகளை எழுதியுள்ளார்.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது நகைச்சுவையான நடிப்பால் கவர்ந்த ரியோ ராஜ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி வர்த்திகா லீலா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் முனிஷ்காந்த், சேட்டன், நயனா எல்சா, பிரியங்கா நாயர், மாளவிகா அவினாஷ், மாகாபா ஆனந்த், தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ளார். இது ஒரு கலகலப்பான மற்றும் காதல் நிறைந்த குடும்பத் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரைடென்ட் ஆர்ட்ஸ், ஆய்வா எண்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
முன்னதாக வெளியான இப்படத்தின் முதல் பாடலான 'யார் யாரிவள்' காதல் மெலடி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகவுள்ள இந்தத் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இத்திரைப்படம் இம்மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.