டிம் கர்ரி 
சினிமா செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகரும் பாடகருமான டிம் கர்ரி மறைவு

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதில் இருந்து அவர் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுடன் போராடி வந்தார்

பிரபல ஹாலிவுட் நடிகரும் பாடகருமான டிம் கர்ரி (80) காலமானார்.

லாஸ் ஏஞ்சலஸில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன் தினம் அவர் அமைதியான முறையில் உயிர்நீத்ததாக அவரது மேலாளர் மார்சியா ஹர்விட்ஸ் அறிவித்துள்ளார்.

'தி ராக்கி ஹாரர் பிக்சர் ஷோ' திரைப்படத்தில் 'டாக்டர் பிராங்க் என் பர்ட்டர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் அவர் புகழ் பெற்றார்.

அவரது இறப்பிற்கான துல்லியமான காரணம் அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும், 2012ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதில் இருந்து அவர் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுடன் போராடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தைகளும் இல்லை. கர்ரிக்கு 12 வயது இருக்கும்போதே அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய அவரின் தந்தை பக்கவாதத்தால் உயிரிழந்தார்.

1999 இல் அவரின் தாயார் மார்பக புற்றுநோயால் உயிரிழந்தார். மூத்த சகோதரி 2001 இல் மூளை புற்றுநோயால் உயிரிழந்தார்.

திரைப்பயணம்

1973 இல் லண்டனில் மேடை நாடகமாகதில் 'டாக்டர் பிராங்க் என் பர்ட்டர்' கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

பின்னர் 1975 இல் அதை தழுவி 'தி ராக்கி ஹாரர் பிக்சர் ஷோ' என திரைப்படமாக உருவான போதும் அதே கதாபாத்திரத்தில் அவர் நடித்தார்.

தொடக்கத்தில் பெரிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், பின்னாளில் அத்திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய கால்ட் கிளாசிக் திரைப்படமாக உருவெடுத்தது.

Clue, Annie, Legend, Home Alone 2: Lost in New York, The Three Musketeers மற்றும் Charlie's Angels ஆகிய தனது தனித்துவமான நடிப்பால் வில்லன் மற்றும் விசித்திரமான கதாபாத்திரங்களில் தோன்றி அசத்தியிருந்தார் அவர்.

நாடகத் துறையிலும் சிறந்து விளங்கிய அவர், Amadeus, My Favorite Year மற்றும் Monty Python's Spamalot ஆகிய நாடகங்களுக்காக மூன்று முறை மதிப்புமிக்க டோனி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

2012இல் ஏற்பட்ட பக்கவாதத்திற்கு பிறகு இவரது நடிப்புப் பயணம் தொய்வை கண்டது. பின்னர் 2024ஆம் ஆண்டு வெளியான Stream என்ற ஹாரர் திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் திரைத்துறைக்குத் திரும்பினார்.

இசை

இசைத் துறையிலும் ஆர்வம் கொண்ட இவர், சொந்த இசைக்குழுவுடன் சேர்ந்து பல இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.

இசையில் ஆவரமுள்ள அவர் பாப் இசை பாடகராகவும் வளம் வந்தார். பல்வேறு இசைக்கச்சேரிகளை அவர் அமெரிக்கா நெடுக நடத்தியுள்ளார். ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.