பிரபாஸ் நடித்துள்ள ஃபௌசி திரைப்படம் டிச.3ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சீதா ராமம் புகழ் ஹனு ராகவபுடி இப்படத்தை இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து பெரும் பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளன.
இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இதில் இரண்டாவது பாகம் ஒரு முன்கதையாக இருக்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பாலிவுட் பிரபலங்களான அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜெயப்பிரதா, பானு சந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பான் இந்தியாப் படமாக தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.