சினிமா செய்திகள்

2026-ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா நடிப்பில் வெளியான அனிமல், புஷ்பா-2, சாவா படங்கள் திரைக்கு வந்து அதிக வசூலை பெற்றுள்ளன. புஷ்பா முதல் பாகத்தில் ராஷ்மிகா ரூ.2 கோடி சம்பளம் வாங்கினார்.

திரை உலகில் சம்பள விஷயத்தில் நடிகைகளிடையே முதலிடத்தை பிடிப்பதில் போட்டி நிலவி வருகிறது. நடிகைகளின் சம்பளமும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

சம்பள விஷயத்தில் நீண்ட காலமாக நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வந்தார். அவர் ஒரு படத்திற்கு ரூ.9 கோடி முதல் ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியானது. 2026-ம் ஆண்டில் ராஷ்மிகா மந்தனா, நயன்தாராவை முந்தியுள்ளார். அவர் நடித்துள்ள ‘காக்டெயில்-2’ படத்திற்காக ராஷ்மிகா மந்தனா ரூ.15 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ராஷ்மிகா நடிப்பில் வெளியான அனிமல், புஷ்பா-2, சாவா படங்கள் திரைக்கு வந்து அதிக வசூலை பெற்றுள்ளன. புஷ்பா முதல் பாகத்தில் ராஷ்மிகா ரூ.2 கோடி சம்பளம் வாங்கினார். சில ஆண்டுகளில் அவரது திரை வாழ்க்கையில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டு தற்போது ரூ.15 கோடி சம்பளம் பெறும் நடிகையாக உயர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT